Ottappam - ஓட்டப்பம்

தேவையான பொருட்கள்: 1 1/2 Cup Raw Rice (அப்பம் சுட பயன்படுத்தும் அரிசி) 1/2 Coconut Salt Baking Soda Sugar Sesame Oil செய்முறை: ...

Wednesday, June 24, 2020

Ottappam - ஓட்டப்பம்

தேவையான பொருட்கள்:
1 1/2 Cup Raw Rice (அப்பம் சுட பயன்படுத்தும் அரிசி)
1/2 Coconut
Salt
Baking Soda
Sugar
Sesame Oil



செய்முறை:
அரிசியை அரைப்பதற்கு ஊற வைக்கவும். குறைந்தது இரண்டு மணி நேரம் அல்லது அரிசியை லேசாகக் கடித்தாலே துகள்களாகும் பதம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் அதை அரைத்து அரித்தெடுக்கவும். அரிக்கும் போது கிடைக்கும் மிகச்சிறிய குறினிகளை(ரவை போன்ற) வேறாக்கி அரித்த மாவுடன் கலக்கவும். அதனை ஒரு சட்டியில் கொட்டி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாகக் குழைக்கவும். காலையில் குழைத்து வைத்தால் மாலை செய்யலாம்.
தேங்காயைத் துருவி முற்பால், பிற்பால் புளியவும்.
மாக்கலவையினுள் தேவையான அளவு உப்பு 1/4 தேக்கரண்டி அப்பச்சோடா சேர்த்து கலக்கவும். பிற்பாலை சிறிது சிறுதாக சேர்த்து மாக்கலவையை தோசைமாப் பதத்திற்கு தண்ணியாக்கவும். சிறிது நேரம் வைக்கவும்.

முற்பாலில் கொஞ்சம் உப்பு, தேவையான அளவு சீனி சேர்த்து கரைத்து வைக்கவும்.

சட்டியில் நல்லெண்ணெய் தடவி ஒவ்வொன்றாக குறைந்த நெருப்பில்  ஊற்றி மூடியால மூடி வேக வைக்கவும். திருப்பத் தேவையில்லை. வெந்ததும் அதை முற்பாலினுள் போட்டு ஊற வைக்கவும்.

நிறைய நேரம் ஊற வைத்தால் ஓட்டுரொட்டி உடையும். தனித்தனி கோப்பைகளில் வேண்டும் என்றால் ஊற வைக்கலாம். ஊற ஊறத்தான் சுவை அதிகாகும்.

சிலர் தட்டையான Non-Stick தட்டில் ஊற்றி தட்டையாக சுட்டெடுப்பர். ஆனால் அனேகமாக சட்டியில் ஊற்றி சுட்டெடுப்பர்.

யாழ்ப்பாணத்தில் ஓட்டுரொட்டி பிரபலம். பழைய உடைந்த ஓட்டு சட்டிகளின் ஓட்டில் சுடுவதால் தான் அதற்கு பெயர் ஓட்டுரொட்டி என பெயர் வந்தது.

Keywords:
How to make Ottappam
Type of Appam
Srilankan Appam
No Yeast
No Overnight Fermentation 

No comments:

Post a Comment