பால்/முட்டை அப்பம் - New
இடித்த சிவப்பரிசியில் செய்யும் பால்/முட்டை அப்பம்.
Recipe
1 Cup சிவப்பரிசி (அப்பம் செய்யப் பயன்படுத்தும் அரிசி)
1/2 Cup கோதுமை மா
1/2 Cup அவித்த கோதுமை மா
1 தேங்காய்
1 பாண் துண்டு( உள்ளே இருக்கும் பஞ்சு போன்ற)
சிவப்பு அரிசியை குறைந்தது 2 மணித்தியாலம் ஊற வைத்து கிறைண்டரில் அரிசிக்கு மேல தண்ணீர் இருக்கும் வகையில் தண்ணீர் விட்டு நன்றா (நறுவல் நறுவலாக) அரைத்துக் கொள்ளவும்.
அந்தக் கலவையை ஒரு சட்டியில் ஊற்றி அதனுடன் 1/2 Cup கோதுமை மா, 1/2 Cup அவித்த கோதுமை மா சேர்க்கவும். பின்னர் தேங்காயை உடைத்து அதன் இள நீரில் பாண் துண்டை நன்றாக நனைய விட்டும் பின்னர் பிசைந்து கலவையில் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிறைவன கலவையை உருவாக்கவும்.
அதனை 12 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
அடுத்த நாள்( மாலை புளிக்க வைத்தால்)
அந்த முழுத் தேங்காயைத் துருவி ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து முதலாம் கழிப் பாலை உருவாக்கவும். பின்னர் இன்னொரு கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து சற்று கழியான இரண்டாம் பாலைத் தயாரிக்கவும். இரண்டாம் பாலில் ஒரு மே.கரண்டி எடுத்து அதில் 1/2 தே.கரண்டி அப்பச்சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைத்த கலவையில் சேர்க்கவும். பின்னர் குழிக் கரண்டியால் இரண்டரை கரண்டி இரண்டாம் பாலை (அல்லது அப்ப மா பதம் வரும் வரை) சேர்த்து கலவையை அப்பம் தயாரிக்கும் பதத்துக்கு உருவாக்கவும். சுட்ட அப்பம் தடிப்பாக வந்தால் இன்னும் கொஞ்சம் இரண்டாம் பால் சேர்த்து கரைசலை பதமாக்கவும். ஒவ்வொரு கரண்டியாக விட்டுக் கலக்குவதன் மூலம் சரியான பதத்தை உருவாக்க முடியும்.
பின்னர். முதலாம் தேங்காய்ப் பாலில் கொஞ்சம் உப்பு தேவையான் அளவு சீனி சேர்த்து (அதிகம் சேர்த்தால் அடிப்பிடிக்கும்) கலக்கி தயாராக வைக்கவும். ஒரு அப்பத்துக்கு 3 மே.கரண்டி வீதம் முதலாம் பால் விடவும்.
பின்னர் அப்பத்தாய்ச்சியில் நல்லெண்ணெய்யை சூடாக்கி ஒரு கப்பில் ஊற்றி வைக்கவும் ஒவ்வொரு அப்பம் சுட்டதும் அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தி அப்பத்தாய்ச்சியை துணியால் துடைத்து எடுக்கவும்.
அப்பம் தாய்ச்சியில் எண்ணெய் துணியால் துடைக்கும் போது புகை வந்தால்... தாய்ச்சி அதிகம் சூடாக இருப்பதாக அர்த்தம். காற்றி தாய்ச்சியை அங்கிட்டும் இங்கிட்டும் 2 அல்லது 3 முறை அசைப்பதன் மூலம் தாய்ச்சியின் சூட்டை குறைக்க முடியும். ஒரு குழுக் கரண்டி அப்ப மாவை தாய்ச்சியில் ஊற்றும் போது "ஸ்.." என்ற சத்தம் கேட்கும் அளவுக்கு தாய்ச்சியில் சூடு இருக்க வேண்டும். தாய்ச்சியில் அப்பக் கலவையை ஊற்றி அப்பமாக சுற்றி விட்டு அதன் நடுவில் முதலாம் தேங்கயாப் பால் அல்லது முட்டை அப்பம் எனின் முழு முட்டை சேர்த்து அதன் மேல் கொஞ்சம் உப்பு/மிளகு தூவி Low Flame (குறைந்த நெருப்பில்) மூடி 2 நிமிடம் சுடவும். பின்னர் கரண்டியால் கிளப்பி விட்டு ஒரு 30 செக்கன் அல்லது நன்றாக ஓரங்கள் பொரிந்து வரும் வரை சுடவும். அடுத்த அப்பம் சுட முன்னர் எண்ணெய் தோய்த்த துணியால் அப்பத்தாய்ச்சியை உள்ப்புறம் துடைக்க மறக்க வேண்டாம்.
மேலே குறிப்பிட்ட அளவுகளைப் பின்பற்றினால் 15 அப்பம் வரை சுட்டேடுக்கலாம்.
ஒரு வேளை அப்பம் சட்டியில் ஒட்டிக் கொண்டால்..
உங்கள் அப்பத்தாய்ச்சி அப்பம் சுட பழக்கப்படவில்லை என்று அர்த்தம். ஆகையால் அப்பம் சுடுவதற்கு என்று தனியாக ஒரு தாய்ச்சியை வைத்து இருப்பது சிறப்பு.
மீன்/ நெத்தலி கருவாடு பொரிக்கும் தாய்ச்சிகள் அப்பம் சுட இலகுவாக இருக்கும்.
ஒரு முட்டையை ஊற்றி அதை வறுத்து ஒரு பொட்டலமாக துணியில் முடித்து அப்பத்தாய்ச்சியின் உள்ப்புறம் ஒவ்வொரு அப்பம் சுட்டதும் துடைத்து வர அப்பம் இலகுவாக கிளம்பும்.
அப்பத்தாய்ச்சியை கல் உப்புப் போட்டு தேய்த்துக் கழுவ வேண்டும்.
நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர் இல்லை என்றால் அப்பத்தாய்ச்சியில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், பாதி பெரிய வெங்காயம் முழுசாக சேர்த்து பொரித்த வண்ணம் அந்த சட்டி முழுக்க வெங்காயத்தால் தேய்ப்பதன் மூலமும் சட்டியைப் பழக்கப்படுத்தலாம்.
Non - Stick அப்பத்தாய்ச்சியை விட சாதாரண அப்பத்தாய்ச்சியில் சுடும் அப்பத்துக்கு தனி ருசி உண்டு.
குறுனி காய்ச்ச தேவையில்லை
Recipe by,
New
Contact: noreply@gmail.com
Please share your valuable feedback, and suggestions with us. Please Try in Little Quantity at first, Don't waste food. Thank You. Share the recipe with your friends, if you like it.
Sent via Google Forms Email
No comments:
Post a Comment