வாய்ப்பன் - New
வாழைப்பழ பணியாரம் - Srilanka - Jaffna
Recipe
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 Cups
சீனி - ஒரு குழிக்கரண்டி அளவு
சர்க்கரை - 1/4 kg
தயிர் - 1 Table Spoon
வாழைப்பழம் - புளி/கதளி - 3
இரண்டாம் தேங்காய்ப்பால் - தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய்
செய்முறை:
அரிசியை 2 Hours நனையவைத்து வடிகட்டி நன்றாக மாவு போல் அரைத்து எடுக்கவும். அரிதட்டின் உதவி கொண்டு அரித்து எடுத்து சிறு குறுணிகளை சேர்த்து விட்டு பெரிய குறுணிகளை மீண்டும் நன்றாக அரைத்து அரித்து மாவுடன் கலக்கவும்.
அதனுடன் சீனி, உப்பு கலக்கவும்.
வாழைப்பழங்களை தனியாக பிசைந்து வைக்கவும். சக்கரைக் கட்டிகளை உடைத்து நன்றாக கரையும் வரை மாவைக் குழைப்பதற்கான அளவு தேங்காய்ப்பால் (2 அல்லது 3 குழிக் கரண்டி) சேர்த்து கரைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் பிசைந்த வாழைப்பழங்களை சேர்க்கவும். பின்னர் நன்றாக கலந்து விட்டு அதனுடன் மா கலவையை சேர்த்து நன்றாகப் பிசையவும். இறுக்கமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். (எண்ணெயில் போடும் போது உருண்டையாக குவிய வேண்டும். தட்டையாக குவிந்து வழியக் கூடாது) பின்னர் தயிர் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் வைக்கவும்.
பின்னர், அளவான வெப்பத்தில் சிறிய அளவில் மாவை இட்டு பொரித்து எடுக்கவும். கருக விட வேண்டாம். பெரிதாக செய்தால் நடுவில் வேகாது.
தண்ணீர் அதிகமாக இருந்தால் அரிசி மா சேர்க்கவும்.
Recipe by,
New
Contact: noreply@gmail.com
Please share your valuable feedback, and suggestions with us. Please Try in Little Quantity at first, Don't waste food. Thank You. Share the recipe with your friends, if you like it.
Sent via Google Forms Email
No comments:
Post a Comment