Ottappam - ஓட்டப்பம்

தேவையான பொருட்கள்: 1 1/2 Cup Raw Rice (அப்பம் சுட பயன்படுத்தும் அரிசி) 1/2 Coconut Salt Baking Soda Sugar Sesame Oil செய்முறை: ...

Thursday, February 6, 2020

TasteLikes - Keeri Samba, Seeraga Sampa Biriyani by Biriyani

Keeri Samba, Seeraga Sampa Biriyani - Biriyani


Recipe

4 Tomato
1 Kg Kiri Samba/ 4 சுண்டு
1 Kg Broiler Chicken
4 Table Spoon Ginger Paste
4 Table Spoon Garlic Paste
100g கொத்தமல்லி இலை
100g புதினா
6 - 8 பச்சை மிளகாய் கீறியது
5 வெங்காயம்
2 பிரியாணி இலை
6 ஏலக்காய்
அரை துண்டு கருவா (ஒரு விரல் அளவு தடித்த துண்டில் உடைத்த)
நற்சீரகம் 1/4 Tsp
4 - 5 கராம்பு
2 Table Spoon தனி மிளகாய் தூள்
1 Table Spoon சக்தி கரம் மசாலா தூள்
1/2 Tea Soon மஞ்சள்
தயிர்
1 தேசிக்காய்
எண்ணெய், நெய்
உப்பு

செய்முறை:

1. அரிசியை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

2. இறைச்சியை துண்டுகளாக வெட்டி 2 Table Spoon வீதம் உள்ளி, இஞ்சி paste சேர்த்து, பின்னர் உப்பு 1/2 Tea Spoon உப்பு, 2 Table Spoon மிளகாய் தூள்(வறுக்காத) , 1 Table Spoon கரம் மசாலா, இரண்டு குழி கரண்டி தயிர் சேர்த்து பினைந்து குறைந்தது 30 நிமிடம் ஊற விடவும்.

3. தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக வெட்டவும்.
4. சின்ன மிக்ஸி Jar இல் பாதிக்கு பாதி அளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து அமுக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும்.
5. சட்டியில் எண்ணெய், நெய் தேவையான அளவு ஊற்றி அதில் கறுவா, ஏலக்காய், கராம்பு, பிரியாணி இலை, நற்சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
6. பின்னர் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். மிகுதி இஞ்சி உள்ளி paste யைப் போடவும். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கரண்டி தயிர் சேர்க்கவும். பின்னர் அரைத்த கொத்தமல்லி புதினாவை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் Marinate செய்த Chicken யை சேர்க்கவும். நன்றாக பிரட்டி எடுக்கவும். இறைச்சியை வேக விடவும். அரிசியை அளந்த டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில்கள் இறைச்சியை வேக விடவும். இறைச்சி வெந்ததும், சட்டியில் இருக்கும் தண்ணீர் அளவை அளக்கவும். ஒரு சுண்டு அரிசிக்கு(அளந்த cup) 1 1/2 சுண்டு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
7. அப்படி பார்த்தால் 6 சுண்டு தண்ணீர் சேர்க்க வேண்டும். ஆனால் முதலில் எவ்வளவு தண்ணீர் பிரியாணி சட்டியில் உள்ளது என்று அளக்கவும். தேவையான மிகுதி தண்ணீர் ஊற்றி உப்பு பார்க்கவும். உப்பு அதிகமாக இருக்க வேண்டும். தேசிக்காய் புளி விடவும். பின்னர் அரிசி சேர்த்து கிளறவும். உப்பு பார்க்கவும். நன்றாக கிளறவும். நீர் வற்றிக் கொண்டு வரும் போது வாழை இலையால் போர்த்தி weight வைத்து தம் பிரியாணி போல் செய்யவும். 15 நிமிடம் low flame, பின்னர் off செய்து விட்டு 20 நிமிடம் கழித்து திறந்து நெய் சேர்த்து கிழறவும். கிழறிய பின்னர் திரும்ப வாழையிலையால் போர்த்தி மூடி மூடலால் மூடி வைக்கவும். பின்னர் பரிமாறவும்.


Recipe by,

Biriyani

Contact: noreply@google.com


Please share your valuable feedback, and suggestions with us. Please Try in Little Quantity at first, Don't waste food. Thank You. Share the recipe with your friends, if you like it.

No comments:

Post a Comment